» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது : பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!

சனி 24, மே 2025 8:22:31 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம நபர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை காவல் ஆய்வாளர் ராஜபிரபு, வடபாகம் காவல் ஆய்வாளர் பாலமுருகன், காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்றபோது, வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோணி மைக்கேல் சுகந்தன் (40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory