» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!!
சனி 24, மே 2025 8:20:36 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக திருக்கோயிலிலும், அதன் உப கோயில்களிலும் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக, தூண்டுகை விநாயகர் கோயிலில் கடந்த ஏப்.20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்த கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக் கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அவ்விரு கோயில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முகூர்த்தக் கால் பிரகாரம் சுற்றி வந்து விநாயகர் பூஜை, பூமி பூஜை நடந்தது. பின்னர் யாகசாலை நடைபெற உள்ள இடத்தில் பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










