» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும்: டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சனி 24, மே 2025 8:13:49 AM (IST)



கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத் தலைவர் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவர் முத்துராமன், செயலர் காளிராஜ், பொருளாளர் பிரபு என்ற கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலர் பாரதி ரவிக்குமார், துணைப் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள், கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் நேற்று அளித்த மனுவின் விவரம்|

எம்.சாண்ட், ஜல்லி, கிராவல், உடைகல் ஆகிய கட்டுமானப் பொருள்களின் விலையை கிரஷர் மற்றும் குவாரிகளின் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர். இம்மாதம் 15-ஆம் தேதி முதல் கிரஷர் மற்றும் குவாரிகளில் எம். சாண்ட் டன் ரூ.1000, ஜல்லி டன் ரூ.900 என உயர்த்தப்பட்டுள்ளது. உடைகல் யூனிட் ரூ.1400, கிராவல் யூனிட் ரூ.800 என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மைன்ஸ் உரிமத்துக்கு ரூ.3600-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒரு டன் எம். சாண்ட் ரூ.600 ஆகவும், ஒரு டன் ஜல்லி ரூ. 500 ஆகவும், ஒரு யூனிட் உடைகல் ரூ.900 ஆகவும், ஒரு யூனிட் கிராவல் ரூ.550 ஆகவும், மைன்ஸ் உரிமம் ரூ.900 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இம்மாதம் திடீரென இதன் விலைகளை இரு மடங்கு வரை உயர்த்தி உள்ளதால் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், லாரி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து கிரஷர் மற்றும் குவாரிகளில் ஒரே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், உயர்த்தப்பட்ட கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory