» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!

திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)



மீரான்குளம் கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியிலும் நகைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளத்தில் ஆம்னி வேனில் வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து 5பேர் உயிரிழந்த நிலையில், சடலங்களை மீட்கும் பணியிலும், மறுநாள் 35 சவரன் நகைகளை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். குழந்தையின் சடலத்தையும் மீட்பதற்கும், நகைகள் அடங்கிய பையினை மீட்கவும் சாத்தான்குளம் தீயணைப்பு படையை சேர்ந்த வீரர் சதிஷ்குமார் கிணற்றுக்குள் இறங்கி தனது பணியினை திறம்பட செய்தார்.

மீட்பு பணியில் சாத்தான்குளம், திசையன்விளை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு படை வீரர்களும் வருகை தந்து தங்களது வேலைகளை சிறப்பாக மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தங்களது உயிரை துச்சமாக மதித்து கிணற்றுக்குள் இறங்கி சடலங்களை வெளியே எடுத்தும், நகைகளை மீட்டும் கொடுத்த வேலை செய்த அனைத்து தீயணைப்பு படை வீரர்களுக்கும் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory