» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)
சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்ன்றி உயரிழந்தார்.
நெல்லை கோவைகுளத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதி மனைவி முத்துலட்சுமி (71), இவர் அவரது உறவினர் முத்துக்குமார் என்பவரை பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு கடந்த மே 5ஆம் தேதி வந்து பார்த்து விட்டு, 6ஆம்தேதி அவரது பேரன் இசக்கிராஜா ஓட்டி வந்த பைக்கில் சாத்தான்குளம் பன்னம்பாறை, செட்டிக்குளம் வழியாக நெல்லை சென்றனர்.
செட்டிக்குளம் வேகதடை பகுதியில் வரும் போது திடீரென எதிர்பாராத விதமாக முத்துலட்சுமி பைக்கில் தவறிவிழுந்தாராம். இதில் காயமடைந்த முத்துலட்சுமியை நெல்லை மருத்துவகல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி இறந்து போனார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










