» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)
எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாமாண்டு / முதலாமாண்டு (முழு நேரம்;) மாணவியர் சேர்க்கை விண்ணப்பத்தினை https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் 07.05.2025 முதல் 23.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
இதில் நேரடி இரண்டாமாண்டு மாணவியர்; சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் + ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், சாதிசான்றிதழ் மற்றும் விண்ணப்பத்தார் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர்கள் முதலாமாண்டு சேர்க்கை பெறலாம். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.150/- ஆகும். ளுஊ/ளுவு மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மற்ற மாணவிகள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம். இக்கல்லூரியின் குறியீட்டு எண் 178 ஆகும். இக்கல்லூரியில் மாணவியர்களுக்கு MECH, EEE, ECE, ICE, CE, G.TECH மற்றும் RENEWABLE ENERGY ஆகிய பாடப்பிரிவுகள்;; உள்ளன.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், இக்கல்லூரி TNEA பொறியியல் மாணவர்கள் சேர்க்கை (TFC-103) சேவை மையமாக உள்ளதால் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9715526364, 9486195488, 04632-271238 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










