» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒய்வூதியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!

ஞாயிறு 18, மே 2025 7:21:26 PM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு ஒய்வூதியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஒய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கோ. சீதாராமன், மாநில துணை தலைவர் சாமிநல்ல பெருமாள் மண்டல செயலாளர் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இதில் சங்கத்தின் மாவட்ட தலைவராக  நெடுஞ்சாலை துறை எப். பாபு, மாவட்ட செயலாளராக நில அளவை துறை சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவராக கருவூலத்துறை கணேசன், மாவட்ட அமைப்பு செயலாளராக கருவூலத்துறை முகமது ஷெரிப் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கைத்தறி ஆடை போர்த்தி கௌரவித்தார்.  

விழாவில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர், 2021 தேர்தல் அறிக்கை வாக்குறுதியாக அளிக்கப்பட்ட, 70 அகவை முடித்திரிட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 10% கூடுதலாக வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்தவும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ .7850 நடைமுறைப்படுத்தல், 

மருத்துவ படியாக மாதம் ரூ. 1000 வழங்கிடவும், ஓய்வூதியதாரர்கள் கம்யூடேஷன் பிடித்த காலத்தினை 15 வருடத்திலிருந்து (Commutation Recovery) 12 வருடமாக குறைத்தல், முழுமையாக களைதல் போன்றவற்றை தாமதிக்காமல் விரைவில் ஆணை வழங்கிடவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.  கூட்டத்தில்  சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

Thangarethinamமே 19, 2025 - 08:45:23 AM | Posted IP 162.1*****

Thanks for publishing our newsin onlinemeadia onlinemeadia. Congratulations for your service

தி.சேதுராமன்மே 19, 2025 - 06:40:31 AM | Posted IP 162.1*****

அய்யா தங்களின் ஒப்பற்ற பணி தொடரட்டும். அன்புடன் தி.சேதுராமன் 7200092260

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory