» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 45 பவுன் நகைகள் மீட்பு
ஞாயிறு 18, மே 2025 6:58:59 PM (IST)

சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5பேர் உயிரிழந்த நிலையில், கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழநதனர். அவர்களது உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் சுமார் சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. உள்ளூரில் இருந்து மோட்டார் வரவழைக்கப்பட்டு கிணற்றிலிருந்து நீரை அகற்றப்பட்டது. அதன் பிறகு கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் கிணற்றுக்குள் கிடந்த இரு பைகளை மீட்டு மேலே அனுப்பினார்.
அதன்படி கண்டெடுக்கப்பட்ட பையில் இருந்து சுமார் 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா, சாத்தான்குளம் காவல்துறை சார்பாக உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செல்வராஜ், காவலர் ஆனந்தகுமார் மற்றும் பலர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு நகைகளை மீட்ட தீனைப்பு படை வீரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வருவாய் துறையினற்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










