» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன் பிடித்த கேரள மீனவர்கள் 17 பேர் கைது : விசைப்படகு பறிமுதல்
ஞாயிறு 18, மே 2025 6:44:19 PM (IST)

தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன் பிடித்த கேரள மீனவர்கள் 17 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தமிழக முழுவதும் கடலோர மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் தங்கள் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்
இந்நிலையில் வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து கேரள மாநில விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர் இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது எனவே இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடலோர அமலாக்க பிரிவு படை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை மற்றும் மீனவ பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார் வளைகுடா பகுதியில் சோதனை செய்து அத்துமீறி நுழைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் ஒரு சிறிய பைபர் படகை பறிமுதல் செய்தனர் இவ்வாறு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ் தமிழ்நாடு கடல் மீன் பிடித்தல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1983 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்
இந்நிலையில் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 42 கடல் மைல் தொலைவில் கேரள விசைப்படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது இதை தொடர்ந்து அந்த படகை சுற்றி வளைத்த மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்தப் படகு மற்றும் படத்தில் இருந்த 17 மீனவர்களையும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் இது தொடர்பாக மீனவர்களிடம் விசாரணை நடத்தி விசைப்படகை பறிமுதல் செய்ததுடன் மீனவர்களை எச்சரிக்கை செய்து 17 மீனவர்களை விடுவித்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










