» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)
தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை "தூத்துக்குடி குரூஸ் பார்னாந்து சிலை அருகே பொருதப்பட்டுள்ள போக்கு வரத்து சிக்னல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. இப்பகுதி வியாபார ஸ்தலமாக இருப்பதலும் பிரதான சாலையை இணைப்பதாலும் போக்குவரத்து நெருக்கடிக்கடி உள்ள பகுதியாகும். விடுமுறை நாளில் இது மேலும் அதிகரிக்கும். சமீபத்தில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் தனியாக காவலர் மூலம் கையாள்வது மிகச் சிரமமாகும்.
மேலும் வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு பழக்கப்பட்டுளதால் மிகுந்த சிரமத்துள்ளாகியுள்ளனர். ஆகவே சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இதில் தலையிட்டு விரைந்து போக்குவரத்து சிக்னலை சரி செய்யுமாறும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)








