» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!
வெள்ளி 16, மே 2025 8:17:39 PM (IST)
தூத்துக்குடி 29 நாட்களாக நீடித்த என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப். 18 முதல் 29 நாட்களாக வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தா்னாவிலும் ஈடுபட்டனா். இப்போராட்டத்தால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மண்டல மத்திய அரசு தொழிலாளர் ஆணையர் பிரவின் பாண்டி மோகன்தாஸ் தலைமையில் பல கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. அதன் படி அனைத்து தொழிலாளர்களுக்கும் Rs.90 தினமும் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர்.
இதனால் மின் நிலையம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது. பேச்சுவார்த்தையில் என்எல்சி தலைமை பொது மேலாளர் பங்கஜ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் ரசல், அப்பாதுரை மற்றும் தொமுச சார்பில் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











Manuckaraj..மே 18, 2025 - 09:05:52 PM | Posted IP 162.1*****