» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2,600 டன் உப்பு ரயில் மூலம் வந்தது

திங்கள் 12, மே 2025 8:55:34 AM (IST)

குஜராத்தில் இருந்து ரயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் உப்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்புத் தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிவடைந்த உடன் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் புதிய உப்பு வரத் தொடங்கியது. அதே நேரத்தில் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரமாக உப்பு உற்பத்தி நடந்து வந்தது. ஆனாலும் தேவைக்கு ஏற்ப உப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு உப்பு கொண்டு வரப்பட்டன. இந்த உப்பை தூத்துக்குடி வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து ரயிலில் கண்டெய்னர் மூலம் சுமார் 2 ஆயிரத்து 600 டன் பருமணி உப்பு தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உப்பு தலா 50 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளை இருந்தன. இதனை வியாபாரிகள் லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தனர்.


மக்கள் கருத்து

Bala Balaமே 17, 2025 - 03:17:08 PM | Posted IP 172.7*****

Enga company'ku dhan vandhuchu.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory