» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விதிகளை மீறியதாக 4 மத போதகர்கள் சஸ்பெண்ட் : திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை

ஞாயிறு 11, மே 2025 11:39:14 AM (IST)

தூத்துக்குடியில் விதிகளை மீறியதாக மத போதகர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து, திருமண்டல நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார். 

தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும், துாத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். இந்நிலையில், மே 8ம் தேதி துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில் ஜோதிமணியின் காரை வழிமறித்து மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர். 

பிஷப் செல்லையாவின் காரையும் அவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மதனிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், மத போதகர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி நேற்று உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஜெயபிரகாசம் ஆகியோர் நடத்தை விதிமீற லில் ஈடுபட்டது தொடர்பான விசாரணை நிலுவை யில் உள்ளது. இதனால், அவர்கள் நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களின் வாழ்வாதார உதவித்தொகை தொடர்பான உத்தரவுகள் உரிய நேரத்தில் பிறப்பிக்கப்படும். அவர்கள் கவனித்து வந்த சர்ச் பணிகளை உதவி மத போதகர்கள் கவனித்து கொள்வர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

Joseph Kமே 13, 2025 - 10:46:47 AM | Posted IP 172.7*****

இப்போது திருமண்டல நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஜோதிமணிக்கு உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள பணி நிர்வாகத்தை நடத்துவது மற்றும் தேர்தலை நடத்துவது மட்டும் தான். ஆன்மீக பணிகளை மேற்கொள்ள கன்னியாகுமரி பிஷப் செல்லையா அவர்களை நியமித்துள்ளது. இப்படி இருக்க ஆன்மீக பணியில் உள்ள குருவானவர்களை நிர்வாகமேற்பார்வையாளர் ஜோதிமணி எப்படி சஸ்பெண்ட் செய்யமுடியும்? இதை ஒரு வழக்காக கொண்டு சென்றால் யார் மாட்டுவார்? அடுத்து சஸ்பெண்ட் உத்தரவு எப்படி வந்தது? அது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒவ்வொரு குருவானவர்க்கும் வழங்கப்படவேண்டும் அல்லது இந்த கடிதத்தில் கீழே ஒவ்வொருவருக்கும் வழங்கியதாக குறிப்பிடப்படவேண்டும். அதன் அசல் பிரிண்ட் என்ன ஆனது? அது யாரிடம் இருக்கிறது? அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் பொறுப்பு மோகனுக்கு யார் வழங்கியது? இந்த நீதிபதி ஜோதிமணி SDK ராஜன் நிறுவன பேனல் வக்கீலாக ஒரு காலத்தில் இருந்தவர். வைகுண்டராஜன் மூலமாக ஜெயலலிதாவிடம் பேசி ஜோதிமணியை நீதிபதி ஆக்கியது SDK.ராஜன். அதற்காக ஜெயலலிதாவிடம் நேரில் நன்றி தெரிவித்தவர் இந்த ஜோதிமணி. இப்படி இருக்க இவர் எப்படி நேர்மையாக தேர்தலை நடத்தப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory