» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்

ஞாயிறு 11, மே 2025 9:45:28 AM (IST)



திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சனிக்கிழமை திறந்து வைத்து, அங்குள்ள கண்காணிப்பு வசதிகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு முன்னேற்பாடாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில், திருக்கோயில் காவல் நிலையத்தில் காவல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில் வளாகம், நகர்ப்பகுதி மற்றும் நகருக்கு வெளியே முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இணைக்கப்பட உள்ளது. காவல் கட்டுப்பாட்டு மையம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தி மாற்றுப்பாதையில் செல்வதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் முக அங்கீகாரம், வாகன எண் மூலம் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.இனி வரும் காலங்களில் பௌர்ணமி, கந்த சஷ்டி போன்ற விழாக்கள் டிஜிட்டல் பாதுகாப்புடன் நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், ஆய்வாளர்கள் கனகராஜன் (கோயில்), இன்னோஸ்குமார் (தாலுகா), மகாலெட்சுமி (அனைத்து மகளிர்), கௌதமன் (ஆத்தூர்), கண்ணன் (குலசை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory