» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தேரோட்டத் திருவிழாவில் அன்னதானம் : மேயர் துவக்கி வைத்தார்

சனி 10, மே 2025 3:20:10 PM (IST)



தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா  தேரோட்டத்தை முன்னிட்டு அன்னதானத்தை மேயர் ஜெகன்பொியசாமி தொடங்கி வைத்தாா். 
    
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    
பின்னா் கோவில் வளாகத்தின் பின்புறம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தார். சுமார் 5000 பொதுமக்கள் அன்னதானத்தில் உணவு அருந்தினர். அதன் பின்பு கோவிலுக்கு சென்ற மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளா்கள் சதிஷ்குமாா், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், கவுன்சிலர்கள் சரண்யா, பேபிஏஞ்சலின், ஜெயசீலி, லாாி புக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், தொழிலதிபா் கமலஹாசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கீதா செல்வமாாியப்பன், ராஜுபட்டா், மகளிர் அணி துணை அமைப்பாளர் சந்தனமாாி,  வியாபாாிகள் சங்க தலைவர் சுப்பையா, முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Elangovan Rமே 10, 2025 - 04:34:40 PM | Posted IP 104.2*****

கோலாகலம், வாழ்த்துக்கள்..... 🌹 ஆன்மீகப் பணி தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. மகிழ்ச்சி... 👑

Tamilanமே 10, 2025 - 04:22:15 PM | Posted IP 162.1*****

ubayatharargalal valangapatta annathanathai meyar avargal thuvakki vaithar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory