» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடைக்குள் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி: உறவினர் காயம்
சனி 10, மே 2025 8:44:01 AM (IST)
எட்டயபுரம் அருகே ஆட்டோ ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் உறவினர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள முதலிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் குணசேகரன் (21). ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மகன் சரவணகுமார் (31) என்பவரும் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணக்குமார் ஆட்டோவிற்கு விளாத்திகுளத்தில் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக குணசேகரன் ஆட்ேடாவில் இருவரும் சென்றனர். ஆட்டோவை சரவணக்குமார் ஓட்டியுள்ளார். பேரிலோவன்பட்டி- சிங்கிலிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ அருகில் உள்ள ஓடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பின்னால் அமர்ந்திருந்த குணசேகரன் படுகாயம் அடைந்தார். சரவணக்குமார் லேசான காயத்துடன் தப்பினார். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ஓடைக்குள் கிடந்த குணசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










