» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 9:32:36 AM (IST)
கோவில்பட்டியில் பழ வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த சேர்மதுரை மகன் மாரித்துரை (33). கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் மாநில வணிகவரி அலுவலகம் அருகே பழ வியாபாரம் செய்துவரும் இவருக்கும், வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் ஜெயராஜ் (62) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாம்.
சம்பவத்தன்று ஜெயராஜ் உள்ளிட்ட 5 பேர் மாரித்துரையை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ஜெயராஜ், மனைவி மல்லிகா (55), கயத்தாறு ஜே.ஜே. நகரை சேர்ந்த தங்கத்துரை மகன் சந்தனசெல்வம் (25), தங்கத்துரை மனைவி ஆரோக்கியமேரி (45) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.| மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










