» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலக்கியச் சாரல் சார்பில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா

சனி 19, ஏப்ரல் 2025 8:10:35 PM (IST)



கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இலக்கியச் சாரல் சார்பில் பாட்டு மன்றம் மற்றும் ஓய்வு பெறும் பள்ளி  தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. 

சகாராவை தாண்டாத ஒட்டகம் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பயிற்சி மைய நிறுவனர் ந. தினகரன் சார்பில் தொடங்கப்பட்ட தமிழ்த் தொண்டு நிறுவனமான 'இலக்கியச் சாரல்' சார்பில் இரண்டாவது நிகழ்வாக "திரையிசைப் பாடல்களில் மக்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பாடகர்களே! பாடகிகளே! என்ற பாட்டரங்கம் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இசை எஃப் எம். கோ. சுரேஷ்குமார் மற்றும்  அகுபஞ்சர் மருத்துவர் சேதுராமன் முன்னிலையில் கிரீன் வே பவுன்டேசன் நிறுவனர் சரஸ்வதி தலைமையில் நடந்தது

நந்தலாலா சந்திரசேகர் வாழ்த்துப்பாடல் பாட, தமிழாசிரியை தங்கத்துரையரசி வாழ்த்துரை வழங்க நடுவராக தமிழ்ச் செம்மல் இரா.இராசு பேச்சாளர்களாக ஆசிரியை கண்ணகி, தேசிய நல்லாசிரியை விநாயக சுந்தரி, கொங்கராயக்குறிச்சி தமிழாசிரியை பார்வதி, தமிழ்ப்பணிச் செம்மல் பிரபு, முருகசரஸ்வதி, ஆசிரியை மணிமொழி மங்கை, வானொலி புகழ் கிருஷ்ணன், வானொலி புகழ் சுப்புலட்சுமி மற்றும் வரகவி நல்லாசிரியர் மா‌. முருகேசன்வேதாரண்யம் அரசுக் கல்லூரி முதல்வர் டாக்டர் மா.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாட்டுகளைப் பாடி மக்களை மகிழ்வித்தனர். 

தொடர்ந்து ஓய்வு பெறும் நல்லாசிரியர் தலைமை ஆசிரியர் வரகவி ம. முருகேசனுக்கு பாராட்டு விழா நடந்தது.  பொன்னாடை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் முருகேசன் ஏற்புரை வழங்கினார். மேலும் சாய் இன்டர்நேஷனல் ட்ரஸ்ட் நிறுவனர் வெங்கடேஷ் மற்றும் இலசை இப்ராஹிம் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கணேசன் பாராட்டி மகிழ்ந்தனர்.மேலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் செம்பருத்திப்பூ, சங்குப்பூ ஆற்றல் பானம் மற்றும் வாழைப்பழ லட்டுக்கள் வழங்கப்பட்டது. முருகன் மற்றும் ஓய்வு வருவாய் ஆய்வாளர் திரிபுரநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.


மக்கள் கருத்து

AnandhApr 19, 2025 - 11:26:11 PM | Posted IP 162.1*****

Mahilchi

SureshApr 19, 2025 - 08:23:29 PM | Posted IP 172.7*****

Congratulations sir!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory