» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் புதிய பாலம் : அமைச்சர் திறந்து வைத்தார்

சனி 19, ஏப்ரல் 2025 4:58:05 PM (IST)



சாகுபுரம் அருகே கம்பா வடிகாலில் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெயின் பாலத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, ஆத்தூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடம்பா வடிகால் வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் மழை மற்றும் வெள்ளம் காலங்களில் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் செல்லும் போது விவசாயம் மற்றும் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு வந்தது. 

இதனை கருத்தில் கொண்டு சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம் அருகே உடைந்து நொறுங்கிய நிலையில் உள்ள தாம்போதி ஜெயின் பாலத்தை மாற்றி அதில் ஒரு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் . இதையடுத்து சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு 2024-25ம் ஆண்டு நிதியில் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பில் புதிதாக ஜெயின் பாலம் கட்டப்பட்டுள்ளது. 

இதன் திறப்பு விழாவிற்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பாலத்தை திறந்து வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory