» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்ப தகராறு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
திங்கள் 24, மார்ச் 2025 8:41:29 PM (IST)
சாத்தான்குளம் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி பாலசரஸ்வதி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் லாரி ஓட்டுநராக இருந்து வந்த அந்தோணிராஜ் கடந்த 22ஆம்தேதி ஊருக்க வந்துள்ளார். இன்று பாலசரஸ்வதி, வீட்டில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் கணவர் அந்தோணிராஜ், அவரை கண்டித்து பிள்ளைகளுக்கு சாப்பாடு வழங்கிட கூறி அவர் வெளியே உள்ள கட்டிலில் உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சுவாதி, வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த தகவலின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நாககுமாரி, இறந்தவர் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து பாலசரஸ்வதி தாயார் சுப்புராஜகனி (56) சாத்தான்குளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










