» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அயன் விருசம்பட்டி, மாமு நைனார்புரம், V.வேடபட்டி, இலந்தகுளம், M.அரசன் குளம், புளியங்குளம், பூசனூர், மந்திகுளம், கோட்டநத்தம், நெடுங்குளம், துவரத்தை, பல்லாகுளம், உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் சம்பா, முண்டு உள்ளிட்டவைகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டு இருந்தார்கள்.
இந்த பருவ காலத்தில் மிளகாய் மகசூல் அறுவடை செய்யும் கால கட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் மிளகாய் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து. சோடை (போலி) வத்தலாக, மாறி விட்டது.. பெரும்பாலான மிள காய்கள் மழை தண்ணீர் இரங்கி உதிர்ந்து விட்டன.
ஏற்கனவே இந்த ஆண்டு மிளகாய் (சம்பா) பயிருக்கு போதிய விலை இல்லாத சூழ்நிலையாலும், உற்பத்தி செலவுகள் அதிகரித்து இருப்பதாலு களை கொள்ளி, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கியதாலும், குத்தகை விவசாயிகள் ஏக்கர் - 6 ஆயிரம் முதல், 10 ஆயிரம் வரை முன்பணம் கொடுத்து பயிர் செய்ததாலும் நாற்றுகளை அதிக விலை கொடுத்து வாங்கியதாலும்.. இறவை பாசன விவசாயிகளுக்கு ஏக்கர் 1க்கு தண்ணீர் கட்டணம் ரூ 1000 - 1500 வரை உயர்த்த பட்டிருப்பதாலும்,
தேசிய ஊரக வேலையால் உள்ளூரில் ஆட்கள் கிடைக்காத சூழ் நிலையாலும், பல கிராமங்களில் விவசாய தொழிலை விட்டு விட்டு மக்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்று விட்ட தாலும், வெளியூரில் இருந்து அழைத்து வரும் ஆட்களுக்கு ஊதியம் கூடுதல் + அழைத்து வர வாகன வாடகை உயர்வு என்பதாலும், உழவு செய்தல், வரப்பு வாய்க்கால் எடுத்து வைத்தல் பணிகளுக்கு கட்டணம் உயர்ந்து விட்டதாலும், விவசாயம் தவிர இப்பகுதியில் மக்கள் வாழ வேறு தொழில் வசதி, தொழிற்சாலை வசதி இல்லாத தாலும் இப்பகுதி கிராமங்களில் இனிவரும் காலங்களில் மீண்டும் விவசாயம் செய்ய இயலாத நிலையில் மிகவும் பாதிக்க பட்டுள்ளனர்..
தமிழக அரசும், வேளாண்மை துறையும் இப்பகுதியை மழையால் பாதிக்க பட்ட பகுதியாக அறிவித்து குத்தகை விவசாயிகள் உட்பட மிளகாய் பயிரிட்ட அனைத்து விவசாயிகள் நிலங்களையும் ஆய்வு செய்து , மிளகாய் பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து ஏக்கருக்கு 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிளகாய் வற்றல் பாதிப்பு குறித்து விருசம்பட்டியை சார்ந்த விவசாயி பெருமாள் கூறும் போது "மிளகாய் பயிர் முழுவதும் அறுவடை நேரத்தில் பருவம் தவறி பெய்த இந்த மழை எங்கள் வாழ்வாதாரத்தை பறித்து கேள்வி குறி ஆக்கி விட்டது. நகை நட்டுகளை அடகு வைத்து, ஏக்கருக்கு ரூ 50,000 க்கு மேல் செலவு செய்து மொத்தத்தையும் இழந்து நிற்கிறோம். அடுத்த முறை எப்படி எதை வைத்து விவசாயம் செய்ய போகிறோம். எப்படி வாங்கிய கடன்களை அடைக்க போகிறோம் என தெரிய வில்லை.எங்கள் வாழ்வையும், வாழ்வாதரத்தையும் காப்பாற்ற தமிழக அரசும், வேளாண்மை துறையும் முன் வர வேண்டும் என்று வேதனையோடு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)











MuniyasamyMar 24, 2025 - 08:20:04 AM | Posted IP 104.2*****