» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கூடுதல் விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு
திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை - தூத்துக்குடி இடையே 12 சேவையாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 30ஆம் தேதிமுதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி விமான எண் 6 இ 7193 சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 7.30 மணிக்கும், விமான எண் எஸ்.ஜி. 2963 சென்னையில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 7.40 மணிக்கும், விமான எண் 6 இ 7343 சென்னையில் இருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 8.35 மணிக்கும், விமான எண் 6 இ 7339 சென்னையில் இருந்து 8.55 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 10.35 மணிக்கும் வந்து சேரும்.
இதேபோல் விமான எண் எஸ்.ஜி.2965 பெங்களூருவில் இருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 11.45 மணிக்கும், விமான எண் 6 இ 7605 சென்னையில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 1.40 மணிக்கும், விமான எண் 6 இ 7735 பெங்களூருவில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 3.55 மணிக்கும், விமான எண் எஸ்.ஜி. 2967 சென்னையில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 3.55 மணிக்கும், விமான எண் 6 இ 7179 சென்னையில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 4.05 மணிக்கும் வந்து சேரும்.
இதேபோல் தூத்துக்குடி இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 9.25 மணிக்கும், 8 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு 9.35 மணிக்கும், 8.55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 10.30 மணிக்கும், 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 12.55 மணிக்கும், 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 1.45 மணிக்கும், 2 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 3.55 மணிக்கும், 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு 5.35 மணிக்கும், 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 6 மணிக்கும். 4.55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு6.30 மணிக்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
YESSMar 18, 2025 - 03:44:55 PM | Posted IP 172.7*****
YES - TWO SEPERATE PLACES SCHEDULE TUTY -- CHENNAI, TRICHI --CHENNAI
ManiMar 17, 2025 - 11:28:31 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடிக்கும், திருச்சிக்கும் என திருத்த வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)











rajamMar 19, 2025 - 05:17:48 PM | Posted IP 162.1*****