» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகள் பறிமுதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 7:57:48 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள ரோல் வெடிகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன், ஆகியோர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில், குழந்தைகள் பொம்மை துப்பாக்கிளில் வைத்து வெடிக்கும் ரோல் வெடிகள் இருப்பதும், இதனை மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வெடிகளை போலீசார் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 இலட்சம் ஆகும். இது தொடர்பாக தப்பியோடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
