» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி கல்வி கழக செயலாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

திங்கள் 22, ஜூலை 2024 11:34:15 AM (IST)



தஞ்சையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தூத்துக்குடி வ.உ.சி கல்வி கழக செயலாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 
தஞ்சை தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) மயிலைத் திருவள்ளுவர் அனைத்துக் கல்லுாரி மாணவர்களுக்கான 24ம் அறிவியல் அறிவியல் தெரிவிப்பியல் திறனாய்வு போட்டி, 61ம் அறிவியல் பூங்கா இதழ் வெளியீடு, அறிவியல் களஞ்சியம் பரிசு, விருது வழங்கும் விழாக்கள் நடந்தன. 

சென்னை மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் அறி வியல் பூங்கா காலாண்டிதழ், நிப்டெம் நிர்வாகம், திருவள்ளுவர் இருக்கையின் பன்னாட்டுத் திருக்குறள் அமைப்புகளின் தமிழ்ச் சங்க நிறுவனச் செயலர் சேயோன் அறிமுகவுரையாற்றினார். சென்னை ஐகோர்ட் லோக் அதாலத் நீதிபதி வள்ளி நாயகம் 61ம் அறிவியல் பூங்கா இதழை வெளியிட்டு பேசினார். 

துாத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்விக் கழகச் செயலர் ஏ.பி.சி.வீ.சொக் கலிங்கத்துக்கு வாழ்நாள் சாத னையாளர் விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத் துறை முன்னாள் தலைவர் பழனி அரங்கசாமிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது, காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழகத் துணைவேந்தர் ரவி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக அறி வியல் துறை முன்னாள் டீன் கபிலன், தஞ்சை மருத்துவக்கல் லூரி முன்னாள் பேராசிரியர் நரேந்திரன், அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் முருகானந்தம் ஆகியோருக்கு அறிவியல் களஞ்சிய விருதுகளும், மத்திய அரசின் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் சட்ட ஆலோசகர் ராமசாமி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெக்ரூசா மைய இயக்குனர் பிரசன்னா, முனைவர் நடராசமூர்த்தி, திருச்சி எஸ்பி செந்தில்குமார், மதுரை மீனாட்சி நாட்டிய கலாலயா நிறுவனர் பிரேமா ஆகியோ ருக்கு அறிவுக்களஞ்சிய விருதுகளும் வழங்கப்பட்டன. 

இதையடுத்து தஞ்சை உலகத் திருக்குறள் பேரவை, திருவை யாறு அவ்வைக் கோட்டம், திருவையாறு பாரதி இயக்கம், திருச்சிராப்பள்ளி தமிழிசைச் சங்கம், திருச்சி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் ஆகியவற்றுக்கு திருக்குறள் நெறிச் சுடர் விருதுகளும், வேதாரண்யம் கஸ்துரிபா காந்தி கன்னியா குருகுலம் இல்ல நிர்வாக அறங்காவலர் அப்பாக்குட்டி வேதரத்னம், தஞ்சை அருட்பெருஞ்சோதி நிறுவனர் தம்பையா, தஞ்சை சித்தர் ஆசிரம நலவாழ்வு மைய நிறுவனர் சித்தர், அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மைய நிறுவனர் தட்சிணாமூர்த்தி, திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் விஜயகுமார் ஆகியோருக்கு சேவைச் செம்மல் விருதுகளும் வழங்கப் பட்டன. நிப்டெம் மக்கள் தொடர்பு அலுவலர் அமுதசுரபி வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் திலகவதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory