» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிட்டோஜாக் முற்றுகைப் போராட்டத்தில் திரளாக பங்கேற்க ஆசிரியா்கள் முடிவு!
திங்கள் 22, ஜூலை 2024 11:29:19 AM (IST)

சென்னையில் டிட்டோஜாக் சாா்பில் வருகிற 31ஆம் தேதி நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் திரளான ஆசிரியா்கள் பங்கேற்பது என தூத்துக்குடியில் நடந்த ஆயத்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக் சார்பாக தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் வருகிற 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் டிபிஐ வளாக முற்றுகை போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுமார் 800 ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும், இதை உறுதி செய்யும் வண்ணம் 24.07.2024 அன்று வட்டார அளவிலான டிட்டோஜாக் கூட்டங்களைக் கூட்டி ஆசிரியர் சந்திப்பு இயக்கங்கள் நடத்தி களப்பணி ஆற்றிட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இரா.ஜீவானந்தம் சுழல்முறைத் தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் அ. மாரி கணேஷ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகி பாபு பரமானந்தம் ஆகியோர் உரையாற்றினர்.
டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளருமான மா.கலை உடையார் மாநாட்டு உரை நிகழ்த்தினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் செ.கணேசன் மாநில அமைப்பு சார்பாகக் கலந்துகொண்டு மாநாட்டுச் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் இணைப்புச்சங்கப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










