» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேடிஎம் வாலட்டிலிருந்து தவறாக வசூல் செய்த தொலைக்காட்சி நிறுவனம் இழப்பீடு வழங்கஉத்தரவு
திங்கள் 22, ஜூலை 2024 9:58:00 AM (IST)
பேடிஎம் வாலட்டிலிருந்து தவறாக வசூல் செய்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 20,999 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி சின்னமணி நகரைச் சார்ந்த பிரவீன் என்பவர் மும்பையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்திடம் ரூ.999 செலுத்தி தொலைக்காட்சி பார்ப்பதற்கான கூப்பன் வாங்கியுள்ளார். ஆனால் அதே கூப்பனுக்காக புகார்தாரரின் பேடிஎம் வாலட்டை பயன்படுத்தி மீண்டும் ரூ.999-ஐ தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி நிறுவனத்திடம் முறையிட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் விட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரவீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பேடிஎம் வாலட்டிலிருந்து தவறாக வசூல் செய்த ரூ.999, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.20,999-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)
