» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி அருகே போக்குவரத்து இடையூறு : பொதுமக்கள் கடும் அவதி!

செவ்வாய் 18, ஜூன் 2024 12:39:01 PM (IST)தூத்துக்குடியில் பள்ளி அருகே போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இரு வாசல்கள் அருகிலும், பள்ளி துவங்கும் நேரம் மற்றும் விடும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. அப்பகுதியில் வசிக்கும் சிலர் சாலைகளின் இருபுறமும் கார்களை நிறுத்தி நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

SheelaJun 29, 2024 - 04:22:01 PM | Posted IP 172.7*****

தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி...

ஆனந்தராஜ்Jun 22, 2024 - 01:50:19 AM | Posted IP 162.1*****

இந்த பள்ளியை சுற்றியுள்ள நபர்கள் அனைவரும் தங்களது கார்களை வேண்டுமென்றே ரோட்டில் தான் நிறுத்தி உள்ளார்கள். இது பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது.கொஞ்ச நேரம் வந்துபோகும் ஆட்டோ பைக்குகளை தடுத்து நிறுத்த வரும் போக்குவரத்து காவலர்கள் நாட்கணக்கில் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நா . எபனேசர் எபிJun 21, 2024 - 03:29:21 PM | Posted IP 172.7*****

பொதுமக்கள் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகளை குறித்து அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர் தங்கள் கருத்துக்களை சமூகவலை தளங்களில் பதிவிட்டு சென்றாள் மட்டும் போதாது மாநகராட்சி நிர்வாகத்திடம் எழுத்து மூலம் கடிதம் எழுதி கொடுப்பதற்கு இங்கு யாரும் இல்லை புகார் பெட்டியில் புகார் எழுதிப் போட யாரும் முன்வரவில்லை

ALLWIN JACOB GJun 20, 2024 - 12:06:42 PM | Posted IP 172.7*****

16 அடி மற்றும் 20 அடி சாலையில் உள்ள பள்ளிகளை இடம் மாற்ற வேண்டும்.

ராமநாதபூபதிJun 20, 2024 - 09:53:28 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடியில் பல்வேரு தெருக்களில் பயன்படுத்தாத பல வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு நிற்கிறது. அதுக்கு யார் உரிமையாளர் என்றே தெரிவதில்லை. மாநகராட்சி அதனை இழுத்துக்கொண்டு போய் தருவை குப்பைக்கிடங்கில் கொண்டுபோடவேண்டும். அதேபோல வீடுகளில் கார் பார்க்கிங் இல்லாமல் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அந்த வீடுகளின் சொத்துவரியை மூன்று மடங்காக வசூலிக்கவேண்டும். இல்லையென்றால் வாகனத்தை பறிமுதல் செய்யவேண்டும்.

Jaya Retna kumar,Human rightsJun 20, 2024 - 07:33:33 AM | Posted IP 172.7*****

அனைத்து பள்ளிகளிலும் போக்கு வரத்து தடை ஏற்படுகிறது.போக்குவரத்து போலீசார் இதனை திறமையாக கையாளும் படி கேட்டுக் கொள்கிறேன்

Kovil maniJun 19, 2024 - 02:37:11 PM | Posted IP 162.1*****

வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதியான குறிஞ்சி நகர் மெயின் ரோடு நாலாவது தெரு இரவு 6 மணி முதல் 9 மணி வரை சம்பளம் போடுகிறேன் என்ற பெயரில் கொத்தனார் மேஸ்திரிகள் நூற்றுக்கணக்கான அவர்களின் நிப்பாட்டி உள்ளனர் இதனால் பெண்கள் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது உடனே மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்

N.sudhagarJun 19, 2024 - 12:55:10 PM | Posted IP 172.7*****

முதலில் தூத்துக்குடியில் பள்ளி நேரங்களில் சரக்கு வாகனங்கள் வருவதைத் தடுக்க வேண்டும் அதுவே சரியான தீர்வாக இருக்கும்...

TutyJun 19, 2024 - 12:36:09 PM | Posted IP 172.7*****

Including hoilycross school

கனிராஜ்Jun 19, 2024 - 09:50:02 AM | Posted IP 162.1*****

ஆல்வின் ஹோட்டல் ஆக்கிரமிப்பை எடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம்Jun 19, 2024 - 09:37:31 AM | Posted IP 162.1*****

எல்லா தெருக்களிலும் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை அப்புறப்படுத்தினாலே போதும்

Ka muruganJun 18, 2024 - 11:39:18 PM | Posted IP 162.1*****

பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் தெருவாசிகள் சுகாதாரமற்ற கழிவுகளையும் கொட்டி வைக்கிறார்கள்

SARGUNARAJ AJun 18, 2024 - 10:47:03 PM | Posted IP 162.1*****

இது போல் காலை8.30ஒ-9மணி மணியளவில் மில்லர் புரம் பிஎம்சி பள்ளி ரோட்டில்,VIKASA மழலையர் பள்ளி எதிரில் ரோட்டில் (குறுகிய சாலை )இதை விட மோசமான நிலையில் இருந்து வருகிறது

tuty peopleJun 18, 2024 - 10:19:17 PM | Posted IP 162.1*****

all road width sizes are reduced and shop sizes are increased how pl.think shop sizes in 10×10 but they are occuping road 10×15

TUTYJun 18, 2024 - 04:29:13 PM | Posted IP 172.7*****

NO HOTEL NEARBY

தமிழ்ச்செல்வன்Jun 18, 2024 - 02:43:08 PM | Posted IP 162.1*****

மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதற்கு தகுந்த தீர்வை தர வேண்டும் காலையில் எல்லா பள்ளி அருகிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தங்களால் முயன்ற யோசனைகளை செய்து மாணவ செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்

தூத்துக்குடிJun 18, 2024 - 12:45:55 PM | Posted IP 172.7*****

ஹோட்டல் ஒன்று இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் சாலை குறுகி விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory