» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கக்கன் 115வது பிறந்த நாள் விழா : காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!

செவ்வாய் 18, ஜூன் 2024 11:36:01 AM (IST)தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தமிழக முன்னாள் காவல்துறை அமைச்சர் தியாகி கக்கனின் 115வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள கக்கன் திரு உருவ சிலைக்கு முன்னாள் தூத்துக்குடி பாராளுமன்ற  இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரத் தலைவர்
இக்னேஷியஸ், பழங்குடியினர் பிரிவு  ஐஎன்டியூசி முனியசாமி, மீனவரணி மிக்கேல் குரூஸ், ராஜபாண்டி ரூஸ்வெல்ட், எட்வர்ட், எஸ்சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு,  சாந்தகுமார், சுரேஷ்குமார், பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory