» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு!

வெள்ளி 14, ஜூன் 2024 5:55:31 PM (IST)



விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பில் பட்டா மாறுதல் கேட்டு விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்ட வட்டாட்சியர் இராமகிருஷ்ணனின் உத்தரவின் மீது அரியநாயகிபுரம் ஜமாத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மேல்முறையீட்டு மனுவை அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள அரியநாயகிபுரம் முஸ்லிம் சுன்னத் ஜமாத்தைச் சேர்ந்த ட்ரஸ்டிகள் 5 பேர் பெயரில், 1955-ம் ஆண்டு வீர காஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழங்கோட்டை முனியசாமி நாடார் என்பவரிடமிருந்து கிரையம் செய்த சார்பதிவக ஆவண எண்: 1350/1955-ன் படி பதிவு செய்து 5 நிர் பழைய அடங்கல் 1,2 கொண்ட நிலமானது ஜமாத்திற்கு சொந்தமானது என்றும், 

இதில் சர்வே எண்: 266/7-ல் உள்ள 86 சென்ட் நிலமானது நூர்ஜகான் பிவி என்பவர் பெயரில் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மோசடியாக பதிவு செய்த நிலத்தை நூர்ஜகான்பீவி இறந்த பின்பு அவரது கணவர் முகமது அபுபக்கர் தனது வாரிசுதாரர்களுக்கு மோசடியாகவும், தன்னிச்சையாகவும் நன்கொடை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார் என்றும், 

இந்த நிலையில் ஜமாத்துக்கு சொந்தமான 86 சென்ட் நிலத்தில் விளாத்திகுளம் - வேம்பார் ரோட்டிற்கு எடுக்கப்பட்ட நிலம் போக ஜமாத் பெயரில் பட்டா எண்: 918 சர்வே எண்கள்: 266/7A2, 266/7A3-ன் படி, மீதமுள்ள 67 சென்ட் நிலத்தை நூர்ஜகான் பீவி என்பவரது பெயரில் இருந்த நிலமானது முகமது அலி ஜின்னா மனைவி காதர்பாத்து பீவி உன் பெயர் மாற்றம் செய்து தற்போது தங்களது ஜமாத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் அதனை அகற்றித் தரக்கோரியும் அரியநாயகிபுரம் முஸ்லிம் ஜமாத் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. 

இதனை விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் எதிர்மனுதாரரான முகமது அலி ஜின்னாவுக்கு சாதகமாக தங்களது மனுவை ரத்து செய்துள்ளார் என்றும், ஆகையால் அரியநாயகபுரம் கிராமங்களில் உள்ள சர்வே எண்கள்: 266/7A2, 266/7A3-ல் கணினி பட்டாவில் உரிமையாளர் பெயரில் தவறாக சேர்த்து உள்ள பெயரை நீக்கியும், UDR, SLR-ல் உள்ள பெயரை மீண்டும் பெயர் மாற்றம் செய்து கொண்டு வர வேண்டும் என்பதையும், கடந்த 10.06.2024 அன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்யக்கோரியும் அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்த மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயிடம் மேல்முறையீட்டு மனு அளித்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory