» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 5¾ கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வெள்ளி 14, ஜூன் 2024 5:27:46 PM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், அவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த இன்னாசிமுத்து மகன் பிரைட் (19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் பிரைட்டை கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 11:23:48 AM (IST)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
