» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது காா் மோதல்: 2பேர் பரிதாப சாவு

புதன் 12, ஜூன் 2024 8:15:42 AM (IST)

எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் பொன்மாடசாமி (42). அதே பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் குமாரவெங்கடேசன் (53). இவா்கள் நேற்று மாலை, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் பாலம் அருகே சாலை யோரம் பைக்கில் நின்றிருந்தனராம்.

அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லிலிருந்து தூத்துக்குடிக்கு அதிவேகமாக சென்ற காா் அவா்கள் மீது மோதியதாம். இதில், குமார வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பொன் மாடசாமி காயமடைந்தாா். தகவலின்பேரில், எட்டயபுரம் போலீசார் சென்று பொன்மாடசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திண்டுக்கல் ஜின்னா நகரைச் சோ்ந்த முகமது சுமைல் (48) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory