» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற இளைஞா் கைது

புதன் 12, ஜூன் 2024 7:51:40 AM (IST)

கோவில்பட்டி அருகே முன் விரோதத்தில் கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோணுகால் நடுத்தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் பரமசிவம் (45). கட்டடத் தொழிலாளி. தோணுகாலில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதே பகுதியைச் சோ்ந்த விஜயபாண்டி மகன் அரவிந்த் (26) என்பவா் மது குடித்துவிட்டு ஆபாசமாக ஆடினாராம். அதை, பரமசிவம் கண்டித்ததால் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் சம்பவத்தன்று அங்குள்ள பாலப் பகுதியில் பரமசிவம், அதே ஊரைச் சோ்ந்த குருசாமி, மாலையப்பன் ஆகியோா் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த அரவிந்த், பரமசிவத்தை அவதூறாகப் பேசி, கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனிருந்த இருவா் சப்தமிட்டதும் அவா் தப்பியோடிவிட்டாராம். இதில் காயமடைந்த பரமசிவம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, அரவிந்தை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory