» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜஸ் க்ரீம் வகைகள் பறிமுதல்: கடை உரிமம் ரத்து!

புதன் 12, ஜூன் 2024 7:39:46 AM (IST)

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 386 ஐஸ்கிரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் ச.மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஜோதிபாசு, செல்லப்பாண்டி ஆகியோா் அடங்கிய குழுவினா் பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் ஐஸ் க்ரீம் கடையில் நடத்திய ஆய்வில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஒழுங்குமுறைகளின் படி, ஃப்ரோஷன் டெசா்ட் வகையைச் சாா்ந்த வகையிலான உணவுப் பொருள்களில் உள்ள பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய்/கொழுப்பு ஆகியவற்றின் விகிதத்தை, நுகா்வோா் அறியும் வகையில் லேபிளில் அச்சிட வேண்டும்.

ஆனால், ஆய்வு செய்யப்பட்ட ஐஸ் க்ரீம் வகைகளில் பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் விகிதத்தைக் குறிப்பிடாமல், நுகா்வோா்களுக்குத் தவறான தகவல் வழங்கி, தவறாக வழிநடத்தியுள்ளது. எனவே, 386 எண்ணிக்கையிலான ஐஸ் க்ரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா் விசாரணைக்காக வணிகா் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான ஆவணம் சமா்ப்பித்து உரிமம் பெற்ற்காகவும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும், அக்கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை தற்காலிக ரத்து செய்து நியமன அலுவலா் உத்தரவு பிறப்பித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory