» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட கோரி வழக்கு!
செவ்வாய் 11, ஜூன் 2024 5:38:58 PM (IST)
அதிச்சநல்லூர் (தற்காலிக) அருங்காட்சியகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா? என நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 125.04 ஏக்கர் பரப்பளவில், பல கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இங்கு கிடைக்கப்பட்ட பொருட்கள் கிமு 1052 முதல் 665 ஆண்டுகள் வரை பழமையானது என கண்டறியப்பட்டது.
தமிழர்களின் நாகரீகத்தை பறைசாற்றும் இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அதே பகுதியில் நிரந்தரமான அருங்காட்சியும் அமைக்க வேண்டும் ஏராளமான கோரிக்கைகள் எழுந்த நிலையில், பி பிரிவில் ஆதிச்சநல்லூரில் தற்காலிக அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தால் இந்த அருங்காட்சியகம் பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சி பிரிவில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ள
அகழாய்வு அருங்காட்சியகத்தை புனரமைத்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி பிரிவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது நிலம் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அரசு தமிழக அரசு நிலம் வழங்கினால் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் மேலும் தற்காலிக அருங்காட்சியகம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் ஐந்தயிரம் ஆண்டுகள் பழமையான பண்டைய தமிழர்களின் நவீன நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பதற்கு பொதுமக்களிடமிருந்து நிலம் கையாகப்படுத்துவது ஏன்? அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளதே எனவே தமிழக அரசே அதே பகுதியில் நிலங்கள் இருந்தால் வழங்கலாமே என கேள்வி எழுப்பினார் எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் நிலங்கள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்.
மத்திய அரசு தரப்பில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மேலும் தொடர்வது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது நிரந்தரமான அருங்காட்சியகம் அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மேலும் தற்காலிக அருங்காட்சியகம் சேதம் அடைந்திருந்தால் அதை புனரமைப்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 27 க்கு ஒத்தி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை
செவ்வாய் 25, மார்ச் 2025 10:49:50 AM (IST)

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 10:28:01 AM (IST)

பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி காசாளர் அடித்துக் கொலை: லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:44:10 AM (IST)

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)

விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருட்டு : 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:37:38 AM (IST)
