» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

ஞாயிறு 9, ஜூன் 2024 7:40:39 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் முன்பு பாய்ந்து நில புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்தவர்  தங்கப்பழம் மகன் அந்தோணி சதீஷ்குமார் (44). நில புரோக்கர்தொழில் செய்து வந்தார். இவர் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கடந்த  3 மாதமாக தூத்துக்குடியில் தனியாக வீடு எடுத்து வேறு ஒரு பெண்ணுடன்  வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory