» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் ஆய்வு

ஞாயிறு 9, ஜூன் 2024 3:02:03 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 200 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார். 

"தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி IV-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகளை தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வட்டங்களில் அமைந்துள்ள 200 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 58,373 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வினை 45,440 பேர் எழுதினர். 

12,933 பேர் பங்கேற்கவில்லை. தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார். தொகுதி 4 தேர்வு எழுத வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory