» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீக்குளித்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு!

புதன் 29, மே 2024 8:08:15 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சிகிச்சை பலினின்றி இறந்தார்

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஞானமுத்து(48). மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி.  இவர் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வாராம். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதுபோல் நேற்றிரவு ஏற்பட்ட தகராறில் மணமுடைந்த ஞானமுத்து தனது உடலில் டீசல் உற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஞானமுத்து சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory