» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குரூப் 1 தேர்வுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்
புதன் 29, மே 2024 3:40:02 PM (IST)
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் TNPSC Group -I தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC Group -I 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த TNPSC Group -I முதல்நிலைத் தேர்வானது வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம் தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)

Karpaga Selvam.mமே 30, 2024 - 07:02:31 PM | Posted IP 172.7*****