» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் மீண்டும் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்!

ஞாயிறு 26, மே 2024 6:43:42 PM (IST)



தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் 13 கோடிக்கு பராமரிப்பு பணி செய்த பிறகு ஐந்தே மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி - நெல்லை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள், கடந்த 2004ம் ஆண்டு தொடங்கியது. ரூ.234 கோடி மதிப்பீட்டில் நடந்த இந்த பணிகள், கால தாமதம் காரணமாக கூடுதலாக ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு 2012ல் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 4 வழிச்சாலையில் நெல்லை - தூத்துக்குடியை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம் இணைக்கிறது. 

ஆனால் கட்டப்பட்ட 5 ஆண்டிற்குள் 2017ம் ஆண்டு பாவத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து பெரிய ஓட்டை விழுந்தது. பாலத்தின் உறுதித் தன்மை குறித்த கேள்வி எழுந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டையில் கான்கிரீட் கலவை போடப்பட்டு போக்குவரத்து துவங்கியது. இதுபோல் பல முறை ஓட்டை விழுந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றுபாலத்தில் 13 கோடிக்கு பராமரிப்பு பணி செய்த பிறகு ஐந்தே மாதத்தில் மீண்டும் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், பொறியாளர்கள் வல்லநாடு பாலப் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory