» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகளுக்கு காகித மடிப்புகலை பயிற்சி!

ஞாயிறு 26, மே 2024 1:47:52 PM (IST)கோவில்பட்டியில் கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் காகித மடிப்புகலை பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடந்த கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 6ம் நாள் நிகழ்வாக காகித மடிப்புகலை பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தலைமை வகித்தார்.வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், தொடக்கக் கல்வி உதவித் திட்ட அலுவலர் நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி ராஜலட்சுமி நாராயணசாமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க  பயிற்சியாளர் அமல்ராஜ் குழந்தைகளுக்கு காகித மடிப்புகலை குறித்து பயிற்சி அளித்தார். இதில் சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள் மணிமொழிநங்கை, கண்ணகி,முருகேசன் உள்படபலர் கலந்து கொண்டனர்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் நட்டாத்தி நன்றி கூறினார்.

இதில் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான குழந்தைகள் காகித மடிப்புக் கலை பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் சாமுவேல்,சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory