» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் என்.பெரியசாமி நினைவு தினம்: அமைச்சர்கள் அஞ்சலி

ஞாயிறு 26, மே 2024 1:44:08 PM (IST)தூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மலர் மரியாதை செலுத்தினர்.
      
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான  பெரியசாமியின் 7ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, மற்றும் ராஜாபொியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்து முன்னணி அஞ்சலிதூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மறைந்த திமுக மாவட்டச் செயலாளர் தூத்துக்குடி செல்வ விநாயகபுரம் மற்றும் நந்தகோபாலபுரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் முன்னாள் தர்மகத்தா தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான என்.பெரியசாமி 7வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இந்து முண்ணனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory