» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் கந்தசாமிபுரம் பொது மயானத்தில் சமூக விரோதிகள் அட்டூழியம்

ஞாயிறு 26, மே 2024 1:40:22 PM (IST)நாசரேத் கந்தசாமி புரத்தில் அனைத்து சமுதாய மக்களும் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு சமீபத்தில் தான் சாலை, தண்ணீர், மின் விளக்கு எரிமேடை, காத்திருப்போர் அறை போன்ற அனைத்து வசதிகளும்  அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டது.  

இங்குள்ள காத்திருப்போர் அறையில் இரவு நேரத்தில் சமூக விரோதிகளும் குற்றப் பின்னணியில் உள்ளவர்களும்  மது குடித்து விட்டு இங்கு பதுங்கி இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இங்குள்ள  குடிநீர் குழாயை சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.  சமூக விரோதிகள் இங்கு பதுங்குவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. 

வேலைக்கு சென்று இரவு இவ்வழியாக  வரும் பெண்களுக்கும் ஆபத்து உள்ளது. ஆகையால் காவல் துறை இரவு நேரங்களில் மேற்படி பொது மயான பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டு  பொது சொத்தை சேதப்படுத்திய சமூக விரோதி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory