» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் விபத்தில் 2பெண்கள் உட்பட 3 பேர் சாவு : 4பேர் படுகாயம்!

ஞாயிறு 26, மே 2024 12:18:38 PM (IST)தூத்துக்குடி அருகே ட்ரை சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் மகன் சிலம்பரசன் (35). ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (66), சிலம்பரசன் மனைவி தங்கம்மாள் (35), முருகன் மகன் சதீஷ் (7) ஆகிய 4பேரும் மோட்டார் மாட்டிய மூன்று சக்கர சைக்கிளில் ஊர் ஊராக சென்று பழைய பேப்பர் அட்டை பிளாஸ்டிக் பாட்டில் வாங்கி தூத்துக்குடியில் உள்ள கடையில் விற்பனை செய்து வந்தனர். 

இன்று காலை கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் சூரங்குடி அருகே உள்ளகீழ சண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர்களை வாங்கிக் கொண்டு சாலையைக் கடக்கும் போது கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார் மூன்று சக்கர சைக்கிள் மீது மோதியது இந்த விபத்தில் மாரியம்மாள், தங்கம்மாள், சதீஷ் ஆகிய 3பேர்களும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த சிலம்பரசன், காரில் வந்த குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), அவரது மனைவி குமரித்தங்கம் (49),  கார் ஓட்டி வந்த அவரது மகன் ஜெனிட் (29) ஆகிய 4பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வெங்கடேச பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory