» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது!
ஞாயிறு 26, மே 2024 10:35:52 AM (IST)

எப்போதும்வென்றான் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய 2பேரை போலீசார் கைது செய்து, வாகனத்தை மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம் சுந்தரம் மகன் கார்த்திக்குமார் (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 24.05.2024 அன்று தனது வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு பின்பு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அவரது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.
இதுகுறித்து கார்த்திக்குமார் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தாளமுத்துநகர், டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் பாஸ்கர் (23) மற்றும் தாளமுத்துநகர், பூபல்ராயர்புரம் சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் (24) ஆகியோர் மேற்படி கார்த்திக்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து எப்போதும்வென்றான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன்இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 75,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)








