» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்!
சனி 25, மே 2024 5:50:30 PM (IST)

வல்லநாட்டில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது. முகாமினை மருத்துவ அலுவலர் கிருஷ்ணவேணி தமிழ் செல்வி துவக்கி வைத்தார்.
சித்த மருத்துவ அலுவலர் ச.செல்வகுமார் மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மா.மதுரம் பிரைட்டன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து குமார வெங்கடேசன் வரவேற்று பேசினார்.இம்முகாமில் 15 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 11 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். இம்முகாமில் சுகாதார ஆய்வாளர் சாஹிர், எக்ஸ்ரே நுட்பனர் கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் அய்யம்மாள், அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், கிராம வளர்ச்சி அலுவலர்கள் தனுஷ்கோடி, செல்வி, சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்
வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!
வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

நூறு அடி உயர மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்!
வியாழன் 19, ஜூன் 2025 10:37:54 AM (IST)
