» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம்

வியாழன் 23, மே 2024 4:10:40 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

தூத்துக்குடி குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தின் அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் - I அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் - II அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் ஜானகி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் - III அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கண்ணன், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் -I அரசு உதவி வழக்கறிஞர் செய்யதுஅலி பாத்திமா, விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் ஸ்ரீதேவி, தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி ஆகியோரும்,

தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, மணியாச்சி லோகேஸ்வரன், தூத்துக்குடி ஊரகம் ராஜசுந்தரம், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், மாவட்ட குற்ற பிரிவு ராஜூ, மாவட்ட குற்ற பிரிவு II சந்திரதாசன், மற்றும் பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அனில் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory