» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம்

வியாழன் 23, மே 2024 3:28:27 PM (IST)தூத்துக்குடியில்  விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் கோழிக்கறி கடைகளின் கழிவுகளை வெளியே கொட்டும் போது, அவைகளை திண்பதற்காக கழுகு, பருந்து போன்ற பறவைகள் அதிகளவில் வரும். இந்த பறவைகள் விமான நிலைய வளாகத்தில் விமானங்கள் பறக்கும் பகுதிகளுக்குள் வர வாய்ப்பு உள்ளது. 

இந்த பறவைகள் விமானங்கள் மீது மோதும் ஆபத்து உள்ளது. அவ்வாறு விமானங்கள் மீது பறவைகள் மோதினால் விபத்து ஏற்பட்டு பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுக்கும் வகையில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுவினர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் கோழிக்கறி கடைகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து உள்ளனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

மேலும், விமான நிலைய பகுதியில் பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் கோழிக்கறி கடைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து அவைகள் முறையான உரிமம் பெற்று செயல்படுகின்றனவா, கழிவுகளை முறையாக அகற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory