» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

என்.பெரியசாமி 7ஆம் ஆண்டு நினைவு தினம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

வியாழன் 23, மே 2024 12:36:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் அனுசரிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுவயது முதல் தி.மு.கழகத்தில் இணைந்து வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர். பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம். தன்பாடு உப்பு சுமை மூடை தூக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 32 தொழிற்சங்கங்களுக்கு தலைவர் அதனை தொடர்ந்து 1986 - ல் தூத்துக்குடி மாவட்டம் தனியாக உதயமான நாள் முதல் தன் இறுதிக் காலம் வரை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர் அண்ணாச்சி என்.பெரியசாமி அவர்கள்.

1986 ல் தூத்துக்குடி நகரமன்ற தலைவர், 1989, 1996 ஆண்டுகளில் 2- முறை சட்டப்பேரவை உறுப்பினர் என பதவி வகித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு எண்ணற்ற நல்ல திட்டப் பணிகளை கொண்டு வந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தன்னுடைய 'முரட்டு பக்தன் என்று பாராட்டப்பட்டவர். இன்றைய கழக தலைவர். மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பை பெற்றவர். தூத்துக்குடி வளர்ச்சியின் நலனில் அக்கறையுடன் செயலாற்றி மறைந்த அண்ணாச்சி என்.பெரியசாமி அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிற மே 26 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

அன்றைய தினம் காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் அன்னாரது நினைவிடத்தில் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory