» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுவர் இடிந்து விழுந்து மீன் வியாபாரி படுகாயம்: நாசரேத் பஸ்நிலையம் அருகே பரபரப்பு! !

வியாழன் 23, மே 2024 12:27:28 PM (IST)நாசரேத் பேருந்து நிலையம் அருகே  தனியார் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் மீன்வியாபாரி காயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் உள்ளது. இதில் வணிக வளாகம், தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் மேல் தளத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை சுமார் 9 மணி அளவில் மூன்று மாடி கட்டடத்தின் மேல் சன்சைடு பகுதி கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. 

இதில் கட்டிடத்திற்கு கீழே நின்று கொண்டிருந்த நாசரேத் அருகிலுள்ள  வெள்ளமடத்தை சேர்ந்த மீன் வியாபாரியான முத்தையா (67) வலது கையில் கான்கிரீட் துண்டு விழுந்ததில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.  காயமடைந்த முத்தையா முதலுதவி செய்யப்பட்டு  வீடு திரும்பினார்.  மழையினால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.  

இக்கட்டிடத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இக்கட்டிடத்திற்கு கீழே உள்ள பகுதியில் நாளிதழ்கள் படித்தவாறு ஓய்வெடுப்பது வழக்கம். நாசரேத் பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.  எனவே மூன்று மாடி கட்டிடத்திற்கு மேலே செயல்பட்டு வரும் செல்போன் டவரை அப்புறப் படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory