» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி
வியாழன் 23, மே 2024 11:17:31 AM (IST)
திருச்செந்தூர் அருகே பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் சிவநேசன் (65). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் சுதர்சன் (48) என்பவருடன் மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
பரமன்குறிச்சி திருச்செந்தூர் பிரதான சாலையில் செல்லும்போது திடீரென பைக் நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவநேசன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)
